Friday, June 09, 2006

நீலக்கடலேறி வந்து மேனிதொடும்

குரல் - மேஜர் சிட்டு

நீலக்கடலேறி வந்து மேனி தொடும் காற்று -வான்
மீதுநிலா பால் சொரியும் நேரம் வலையேற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலை
ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

வலையை வீசடா -கடல்
அழகைப் பாரடா -கடல்
புலிகள் தந்த வாழ்க்கையென்று
வாழ்த்துப் பாடடா

காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
நாங்கள் கரையேறுமட்டும் பார்த்திருப்பார் பெண்கள்
வேங்கைகளை நம்பியிங்கு தூங்குதவர் கண்கள்

இந்த ஊரறியாதெங்கள் வேதனை -நாங்கள்
உண்பதுக்கெத்தனை சோதனை... சோதனை


பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதையா ஏன் திரும்பவில்லை
சிங்களத்துப் பேய்களினால் பிள்ளையுயிர் போச்சு
சந்ததிக்கு வாய்த்த உடல் மீனுக்கிரையாச்சு

இது சோகங்கள் தாங்கிய தேகங்கள் -இன்று
சொந்தங்கள் வந்தால் சந்தோசங்கள்


அச்சமின்றி கடலில் ஏறி வாழ வைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்
போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்தஉலகில்

நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள் -பிர
பாகரன் காலத்தைப் பாடுங்கள்... பாடுங்கள்