Wednesday, July 26, 2006

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

குரல் - திருமலைச்சந்திரன்
'மறைமுகக் கரும்புலிகள்' பற்றிய ஒரு பாடல்

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து
வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று
வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று
வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று

தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்
வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம்
வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி
நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை
விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை
சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள்
சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள்
வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை
காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள்
மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது
வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த
செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு
வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா

பாடல்வரிகள் - புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு - முரளி.


ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளி வந்த பாடல். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல்.

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ
ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா

எந்த மாதிரி அட அந்தமாதிரி
எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ்
ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி
சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ
தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி
இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட
சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி

ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ
உள்ளதையும் தந்து போறா நந்தலாலா
மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப
மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா

அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ
ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா
அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள்
அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா