Sunday, July 30, 2006

தங்கையரே தம்பியரே நீங்கள்

பாடியவர் - இன்பநாயகி
வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு

தங்கையரே தம்பியரே நீங்கள்
சிந்திக்கும் நேரமிது - கொடும்
சிங்கப் படையை செங்களத்தில்
சந்திக்கும் காலமிது
எங்களினம் வாழ்ந்திடவே
பங்கமது நீங்கிடவே
பொங்கி எழுந்திடு பூகம்பமாகவே
சிங்கப் படை எங்கள் தேசம் விட்டோட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

தங்கத் தலைவனின் பாதையிலே
தாயக பூமியை மீட்டிடுவோம்
எங்கும் உரிமைப் புரட்சி வெடித்திட
ஈழச் சுதந்திரம் காத்திடுவோம்
மங்கள கீதம் நம் மண்ணில் ஒலித்திட
மாறா உறுதியில் நாமும் போராடிட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து போராடணும்
ஆதிக்கப் பேய்களும அஞ்சியே ஓடணும்
வீட்டுக்கு வீடிங்கு வேங்கையாய் மாறணும்
வெங்களமாடியே விடுதலை தேடணும்
மானத் தமிழ்க் கொடி வானில் பறக்கணும்
மாவீரர் கனவினை நாம் நனவாக்கணும்

தங்கையரே தம்பியரே நீங்கள்...

பாலத்தில் காலத்தை ஓட்டுவதா - தமிழ்
ஈழத்தைச் சிங்களம் ஆட்டுவதா
வீரம் மானம் இல்லாக் கோழையென்று
எதிர் காலம் உம்மைப் பழி சாட்டுவதா
நாளை நமக்கொரு நாடு மலர்ந்திட
நாடி ஓடிக் களம் ஆடிக் களித்ததிட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்



பார்வதி சிவபாதம்



காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்


எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எந்தையர் ஆண்டதின் நாடாகும்

குரல் - பாடகர் சாந்தன்

எந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை
எதிரிகள் ஆள்வது கேடாகும்
வந்துநீ களத்தினில் போராடு -அடிமை
வாழ்விலும் சாவது மேலாகும்

மீனினம் பாடிடும் தேனாடு -வரை
விண்முட்டும் சீர்திரு மலைநாடு
மானினம் வாழ்முல்லை வளக்காடு -வயல்
வன்னியும் எங்களின் மண்ணாகும்

முத்துக்கள் விளைகடல் மன்னாரும் -தம்பி
முத்தமிழ் புலமைசேர் யாழ்நாடும்
சொத்தென நிறைபுகழ் தமிழீழம் (2)-இதில்
தொல்லைகள் மேவினால் என்னாகும்

சிங்களர் காலடி படலாமோ -ஈழம்
சீர்கெட தமிழர்கள் விடலாமோ
சொந்த மண் அழிந்ததன் பின்னாலே(2) -பிறர்
சோற்றுக்கு வாழ்வதோ வாழ்வாகும்

கொலையோடு கொள்ளைகள் செய்வார்கள் -பெரும்
குண்டினை மழையென பெய்வார்கள்
தலையோடு மனைகளும் பாழாக(2) -தீயில்
கருக்குவர் ஒவ்வொரு நாளாக

தாயகம் மீட்டிட நீயோடு -பிரபா
தானையில் சேர்ந்தொரு புலியாகு
போயினி செருவினில் விளையாடு (2)-தமிழ்
பூத்திட புதியதோர் புறம்பாடு
புறம்பாடு.. புறம்பாடு.. புறம்பாடு....

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா

குரல் - பாடகர் சாந்தன்

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா
தமிழ்மக்கள் அறிவென்ன சாலமே குருடா
தன்தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா
தலைவனின் ஆணைகொள் புலியே நீ ஆளவா

போடு போடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

சங்கத்தமிழ் கண்டோன் தமிழ்வீரன் அல்லனா
இமையத்தில் புலிநட்டோன் தமிழ்வீரன் அல்லனா
ஈழத்தை மீட்பவன் தமிழ்வீரன் அல்லனா
இனிவேறு புறமொன்று நானிங்கு சொல்லவா

போடுபோடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

ஓட்டிகளே படகோட்டிகளே

குரல் - மாவீரன் மேஜர் சிட்டு
கடலில் புலிகளுக்காகப் படகோட்டி,
கொல்லப்பட்ட படகோட்டிகள் நினைவாக எழுந்த பாடல்.

ஓட்டிகளே படகோட்டிகளே -எங்கள்
உணர்வினுக்கே வழிகாட்டிகளே

வானில் நிலாவரும் காலத்திலும் - கரும்
மேகம் உலாவரும் நேரத்திலும் -குளிர்
வாடையடிக்கின்ற காலத்திலும் -புயல்
வந்து அழிக்கின்ற நேரத்திலும்
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

ஆயுதங்கள் கொண்டு தந்தீரே -ஏதும்
ஆகாமல் கரை வந்தீரே - உயிர்
போகாமல் எம்மை காத்தீரே -நாங்கள்
போராட வலு சேர்த்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

சாவுக்கு நீரஞ்சி நிற்காமல் -உங்கள்
தாய்பிள்ளை தாரத்தை எண்ணாமல் -தமிழ்
ஈழத்தின் விடிவிற்காய் வாழ்ந்தீரே -அலை
ஏறும் கடல்மடி பாய்ந்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...