Saturday, November 25, 2006

வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை

திருமலை மீது இன்னொரு பாடல்.
திருமலை மீட்பைப் பற்றிய பாடலிது.
இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்றது.

பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன்.


வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை
வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை

இடிமின்னலோடு புயல் மழைபெய்திடும்
அடிவானில் விடிவெள்ளி முகம்தந்திடும்
தெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம்
தமிழீழத் திசையாவும் சிவப்பாவதோ?

கோணமாமலை மீது துயர் மூண்டது
கொடியோரின் படைகள் அங்கு வந்தது
எரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது
உயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது.

நாம்வாழ்ந்த நிலமெங்கும் விசப்புற்றுக்கள்
நடமாட வழியில்லை முட்பற்றைகள்
இசையோடு தமிழ்பாடும் ஒலியில்லையே
விடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே

விழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ
மொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ
எழுவானில் திசைவாழ எழுந்தாடுவோம்
பொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம்

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்

விழியில் சொரியும் அருவிகள்

1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம்.
பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர்.
அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.

திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது.
அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான
மேஜர் தணிகைமாறன்,
மேஜர் கதிரவன்,
மேஜர் மதுசா,
கப்டன் சாந்தா.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது.
மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில்
இப்பாடல் வெளிவந்துள்ளது.


விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
பகைவன் கப்பலை முடித்தனர் -திரு
மலையில் வெடியாய் வெடித்தனர்.
தம்பி கதிரவன் எங்கே
தணிகை மாறனும் எங்கே
மதுசாவும் எங்கே
தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்
தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்
ஏறி நடந்தவரே -உங்கள்
ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக
கொடுத்தவரே
தமிழ் ஈழம் உமை மறக்காது
பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை
தீயில் எரித்துவிட்டீரே -அவன்
ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே
ஈழம் மலர வைத்தீரே
வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள்
வாசலில் துயர்க் கோலங்கள்

Thagaval-Vanniyan

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்

தலைநகர் திருகோணமலை மீதொரு பாடல்

பாடலைப் பாடியவர் - மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது -
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.


கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.

கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து

கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2

26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.


பாடியவர்: வசிகரன்
ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து
வாசலில் வெடித்த கொடுமையென்ன?
அஞ்சுபேர் உன்னுடன் நின்மனையில்
ஆகுதியான சோகமென்ன?

சங்கம் முழங்கிய திருவாயெங்கே -கேணல்
சங்கர் எனும் எம் சமர்ப்புலி எங்கே
தங்கத் தலைவன் தனிப்பலம் எங்கே -ஈழ
தமிழாள் ஈன்ற தவப்பயன் எங்கே


தலைமகன் நெஞ்சம் தவித்திடுதே -ஈழ
தமிழர்கள் நெஞ்சம் பதைத்திடுதே
அலையென திரண்டோம் மாவீரா -கண்கள்
அஞ்சலி பூவாய் மலர்ந்திடுதே

ஒருகணம் நினைந்தே உருகுகின்றோம் -உம்மை
மறுகணம் நினைத்து பொருமுகின்றோம்
கருவினில் வீரம் படைத்தவனே -உம்
கடமையை முடிக்க திரளுகின்றோம்

வஞ்சகர் வஞ்சனை வெல்லாது -நின்
வழிவரும் வரிப்புலி நில்லாது
வெஞ்சமர் களத்தில் வெற்றிபெறும் -உம்
வேள்விக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்

மாமலையொன்று மண்ணிலேஇன்று

26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.


மாமலையொன்று மண்ணிலே இன்று
சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு
தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு
வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு

சேதனை தாண்டி வந்தாடிய வானர
காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்
சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்
தலைவனை தாங்கிய தோழன்

முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்
முதலோனின் நிழலாகி உறவாடினாய்
விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்
விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்
விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்
தலைவனுக் குயிர் எனும் உறவு

பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த
புயலுக்கும் அசையாத மலையாகினாய்
பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்
படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்
அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ
அதன்மேலே போட்டானே நெருப்பு

அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்
அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்
ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்
உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்
நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை
நெருப்பினில் பகைவிழும் உறுதி

நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக

05.10.1987 அன்று இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்களில் ஒன்று இது.

பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள்
குரல்:தேனிசை செல்லப்பா

நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார்
-(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

சங்கு முழங்கடா தமிழா

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தமிழர்படையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்த பாடலிது. பூநகரி வெற்றி பற்றி எழுதப்பட்ட பதிவு: தவளைப் பாய்ச்சல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: பூநகரி நாயகர்
பாடியவர்கள்: சாந்தன், மற்றவர் யாரென்று தெரியவில்லை.


சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே
பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா

நாகதேவன்துறை வேகப்படகுகள்
நம்கையில் வந்ததடா -பகை
ஏவியபீரங்கி யாவுமே எங்களின்
காலிற் கிடக்குதடா -அட
பாயும் புலிகளின் கையில் எதிரியின்
பாசறை வீழ்ந்ததடா -காற்றில்
பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது
வந்த படைகளடா.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

'புயற்கால இராகங்கள்' என்ற இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் இது.

எங்கள் தோழர்களின் புதைகுழியில்
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
ஈழம் மீட்பது உறுதி

இளமைநாளின் கனவையெல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்
கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்

வாழும்நாளில் எங்கள் தோழர்
வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்
தோழர் நினைவில் மீண்டும் தோளில்
துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

தாவிப்பாயும் புலிகள்நாங்கள்
சாவைக்கண்டு பறப்போமா?
பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போனவழியை மறப்போமா?

வெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடப்பட்ட பாடலிது.

ஒலிவடிவில் - வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்


வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.