மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத் தடையில்லை
நாங்கள் மட்டும் உலகத்திலே
நாடு திரும்ப முடியவில்லை
நாடு திரும்ப முடியவில்லை
சிங்களவன் படைவானில்
நெருப்பை அள்ளிச் சொரிகிறது
எங்கள் உயிர்த் தமிழீழம்
சுடுகாடாய் எரிகிறது
தாயகத்துப் பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கின்றான்
பெற்றவங்க ஊரிலே
ஏங்குறாங்க பாசத்திலே
எத்தனை நாள் காத்திருப்போம்
அடுத்தவன் தேசத்திலே
உண்ணவும் முடியவில்லை
உறங்கவும் முடியவில்லை
எண்ணவும் முடியுதில்லை
இன்னும்தான் விடியுதில்லை
கிட்டிப்புள்ளு அடித்து நாங்கள்
விளையாடும் தெருவிலே
கட்டி வைத்து அடிக்கிறானாம்
யார் மனதும் உருகவில்லை
ஊர் கடிதம் படிக்கையிலே
விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப்புலிகள் பக்கத்திலேயே
போகமனம் துடிக்குது
Monday, November 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எனக்கு இந்தப்பாட்டு விருப்பம்.யுனில இருக்கிற ஒரு மியுசிக் குறூப் இந்தப்பாட்டை ரொம்ப அழகா உணர்ச்சியோடு பாடுவார்கள்.இடையில வாற இசை கூட இசைக்கருவிகள் எதுவிமின்றி வாயிலிருந்து பலவித சத்தங்கள் போட்டுப் பாடுவார்கள்.
Post a Comment