Wednesday, July 29, 2009

காவலரண் மீது காவலிருக்கின்ற

பாடல்: காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே..!
பாடல் இடம்பெற்ற இறுவட்டு: வெஞ்சமரின் வரிகள்
பாடல் வரிகள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை
பாடலைப் பாடியவர்: நிரோஜன்
பாடலுக்கு இசை: தமிழீழ மகளிர் இசைக் குழு


Get this widget | Track details | eSnips Social DNA


‘காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே,
என் மகளே- இந்தப்
பாச உறவிங்கு பாடும் குரல் வந்து காதில் விழுமா?
என் மகளே? காதில் விழுமா என் மகளே?
சாமம் கழிகின்ற நேரம் உன் காவலரண் கூட ஈரம்
பாயும் இருக்காது மகளே படுக்க முடியாது!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

சாகும் வயதான போதும் எனக்குள்ளே
சாகப் பயம் இன்னும் மகளே,
சாகப் பயம் இன்னும் மகளே- நீ
பாயும் புலியாகி காவலரண் மீது
காவலிருக்கின்றாய் மகளே,
காவலிருக்கின்றாய் மகளே!
நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்
நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு
பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு
உனைப் பார்க்க வர இன்று விருப்பு!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

முந்தி இரவென்ன பகலும் தனியாகப்
போகத் துணை தேடும் மகளே
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே,
வென்று வருகின்றாய் மகளே!

தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு
உயிரை விட வேண்டும் மகளே,
உயிரை விட வேண்டும் மகளே- என்
பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும்
பெருமையது போதும் மகளே,
பெருமையது போதும் மகளே!

நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)