Wednesday, February 22, 2006

குக்கூக் குக்கூக் குயிலக்கா ...

வரிகள் - முல்லைச்செல்வன்
பாடியவர் - குட்டிக்கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்
வீரத்தையே தினம் பாடு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி
வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்
வீரத்துக்கே இணையில்லை - இதை
நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி
கொஞ்சும் குரல்தனில் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது
எங்கள் புலி பயந்தாரா - கொண்ட
இலட்சியத்தை மறந்தாரா - அவர்
சத்தியம் காக்க யுத்தம் புரிந்த
சங்கதியைத் தினம் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

காலைப் பொழுதினில் சோலை நடுவினில்
கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப
இராகம் இனிக்கும் உன் குரலக்கா
நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்
நாலு திசை எட்டப் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

Wednesday, February 15, 2006

மண்ணில் விளைந்த முத்துக்களே...

பாடல் வரிகள் - காந்தன்
பாடியவர் - ஹரிகரன்

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா
விந்தைதானடா

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா

சந்தனப் பேழையிலே
உறங்கிடும் தோழனே
எனக்குன் துணிவைத் தா
எனக்குன் புடவை தா

அண்ணன் தம்பி ஆகி விட்டோம்
அப்பு ஆச்சி ஆசிப் பட்டோம்
ஆயுதங்கள் ஏந்தி விட்டோம்
ஆனவரை பார்த்திடுவோம்

காலம் வரட்டும் காத்திருப்போம்
காதில் சங்கொலி கேட்டிருப்போம்
போ.. வந்தால் போர் தொடுப்போம்
சாதல் என்றால் பேர் கொடுப்போம்
இனி நாளை நாம்தான் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா

சிறைகளில் இருந்ததும்
தலைகளை இழந்ததும்
விடுதலை அடையவே
நினைத்தது நடக்கவே

உங்கள் அடிச்சுவட்டிலே
எங்கள் வழி இருக்குது
எதிரிகள் தெரியுது
எண்ணங்கள் புரியுது

தீரம் என்றென்றும் ஒய்வதில்லை
வெற்றி என்பது தூரமில்லை
நாளை என்பது நம் கையிலே
நாடு என்றென்றும் நம் கண்ணிலே
புது வாழவே காண்போம் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா
விந்தைதானடா