Monday, May 29, 2006

ஆண்டாண்டு காலமதாய் நாம்

பாடியவர் - குட்டிக் கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு
வரிகள் - முல்லைச்செல்வன்

ஆண்டாண்டு காலமதாய் நாம்
ஆண்டு வந்த பூமி
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி
சுத்தி வந்த வீதி
எங்கள் அக்கா அண்ணையரே
எதிரி இங்கு வரலாமா
எங்கள் மண்ணை ஆள நினைச்சா
வேங்கை நாங்க விடலாமா

(ஆண்டாண்டு)

வீட்டுக்கொரு வீரன் போனா
விடுதலையும் நாளை வரும்
வீதியிலே சுத்தித் திரிஞ்சா
அடிமையாகச் சாக வரும்
ஆட்டம் போடும் ராணுவங்கள்
அலறி ஓடணும் . நாம்
அடிமை இல்லை என்று புதிய
பரணி பாடணும்

(ஆண்டாண்டு)

எங்கள் வேங்கைத் தலைவன் தானே
எங்களுக்கு வழிகாட்டி
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடுவோம் தீ மூட்டி
பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு
புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு

(ஆண்டாண்டு)

என்னினமே என் சனமே
இன்னும் என்ன மயக்கமா
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடவே தயக்கமா
பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை
பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா

(ஆண்டாண்டு)

No comments: