Tuesday, July 25, 2006

மறவர் படைதான் தமிழ்ப்படை

வரிகள் : காசி ஆனந்தன்

மறவர் படைதான் தமிழ்ப்படை -குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

புதிதோ அன்று போர்க்களம் -வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் -கவி
பாடிமுடிப்பார் மங்களம்

சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு -என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

தமிழன் பண்பில் உருப்படி -அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையம் தன்னை முதற்படி -பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு -நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு -கண்
சிவந்து நின்று போராடு

5 comments:

சிவம் அமுதசிவம் said...

அமையும் அல்ல! அமையம். இது, சமயம் எனும் பொருள்படும் சங்ககாலத்தமிழ்.
எ.கா.: உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து (புறநா. 65)

Chandravathanaa said...

மிக்க நன்றி சிவம். திருத்தி விட்டேன்.

சிவம் அமுதசிவம் said...

ஏற்றுக்கொண்டமைக்காக நன்றி சொல்ல வேண்டியவன் யான் தான்!
இல்லையேல், ´தமிழ் இப்படி அழிகிறதே` என்று கவலைப்பட்டுக்கொண்டே, எனது சிறிய வாழ்வுக்காலத்தின், ஒரு பகுதியைக்க்கூட இழந்திருப்பேன்.
இந்த முதியவனின் வாழ்வுக்காலத்தை நீடித்தமைக்காக நன்றியம்மா நன்றி!

நன்றி சிவம்