Tuesday, July 25, 2006

காந்தரூபன் வாழுகின்ற கடலிது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடத்திய காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகியோரையும், அதன்பின் வேறொரு தாக்குதலில் வீரச்சாவடைந்த சிதம்பரம், ஜெயந்தன் ஆகியோரையும் நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடல். நெய்தல் இசைநாடாவில் இடம்பெற்றது இப்பாடல். 1991ஆம் ஆண்டு (10.07.1990) முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

காந்தரூபன் வாழுகின்ற கடலிது
கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது
நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது
ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு
விலையேது விலையேது

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்
புகழை உலகெங்கும் கூவு -அவர்
உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி
உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு

எதிரி வருவானா கரையைத் தொடுவானா
என்று புயலாகி நின்றோம் -புலி
அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்
அணியில் துணையாகி வென்றோம்
உலகத் திசையாவும் தமிழன் அரசாளும்
நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல்
புலிகள் படைசென்று பகைவர் படைவென்று
புலரும் தினமன்று திருநாள்

கடலின் கரையோரம் தலைவன் உருவாகி
கால்கள் நடைபோட வந்தான் -பெரும்
தடைகள் எதுவந்த போதும் அவன்காலில்
உடையும் எனச்சொல்லி வென்றான்
பூவும் புயலாகி பாயும் புலியாகி
போரில் குதித்துள்ள நாடு -தமிழ்
ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்
என்று களம்நோக்கி ஓடு

No comments: