Saturday, November 25, 2006

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து

கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2

26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.


பாடியவர்: வசிகரன்
ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து
வாசலில் வெடித்த கொடுமையென்ன?
அஞ்சுபேர் உன்னுடன் நின்மனையில்
ஆகுதியான சோகமென்ன?

சங்கம் முழங்கிய திருவாயெங்கே -கேணல்
சங்கர் எனும் எம் சமர்ப்புலி எங்கே
தங்கத் தலைவன் தனிப்பலம் எங்கே -ஈழ
தமிழாள் ஈன்ற தவப்பயன் எங்கே


தலைமகன் நெஞ்சம் தவித்திடுதே -ஈழ
தமிழர்கள் நெஞ்சம் பதைத்திடுதே
அலையென திரண்டோம் மாவீரா -கண்கள்
அஞ்சலி பூவாய் மலர்ந்திடுதே

ஒருகணம் நினைந்தே உருகுகின்றோம் -உம்மை
மறுகணம் நினைத்து பொருமுகின்றோம்
கருவினில் வீரம் படைத்தவனே -உம்
கடமையை முடிக்க திரளுகின்றோம்

வஞ்சகர் வஞ்சனை வெல்லாது -நின்
வழிவரும் வரிப்புலி நில்லாது
வெஞ்சமர் களத்தில் வெற்றிபெறும் -உம்
வேள்விக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்

No comments: