Thursday, July 27, 2006

யாரென்று நினைத்தாய் எம்மை

பாடல் எழுதியவர்: மறைந்த கவிஞர் நாவண்ணன்.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன்.

யாரென்று நினைத்தாய் எம்மை
ஏன்வந்து அழித்தாய் மண்ணை
போரென்றா எழுந்தாய் வந்து
புலிகாலில் விழுந்தாய் பணிந்து

கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ -முன்னர்
ஆண்டிருந்த நிலமுழுதும் நாமிழக்கவோ (2)
தாண்டிக்குளம் மேலே மேகம் இடியிடித்தது -எல்லை
தாண்டிவந்து நின்றவர்க்கு உயிர் துடித்தது

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு
வருவாயா அனுருத்த நம்பி

கொண்டுவந்து ஆயுதங்கள் நீகுவிப்பதோ -நாளும்
குண்டுகளால் எங்கள்தேசம் தீக்குளிப்பதோ (2)
கோபம் கொண்ட வேங்கைள் களங்களாடினர் -தாண்டிக்
குளத்தில் நின்ற பகைவர்கள் பிணங்களாயினர்

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு
வருவாயா அனுருத்த நம்பி

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன்

10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன் -எங்கள்
சாதுரியன் யாழினியும் உயிர் கொடுத்தனர்
பெருவிழியில் கனல்சுமந்து இவர் நடந்தனர் -தாண்டிக்
குளமிருந்த பகைமுடித்து இவர் விழுந்தனர்

நெருப்பென நிமிர்ந்தவர் இருப்பது அழித்திட
எழுந்தவர் படையினை உடைத்தனர் -உயர்
கரும்புலியாகியே களத்திடை ஆடியே
கயவர்கள் தங்ககம் தகர்த்தனர் -வெடி
மருந்துடன் தம்முடல் வெடித்தனர்

சந்ததி காத்திட கந்தகம் சுமந்திவர்
சாவினை நெஞ்சினில் -இவர்
சந்தன மேனிகள் வெந்திடும் போதிலே
சிந்தையில் தலைவனை நினைத்தனர்
தமிழ் தேசத்தின் புயலென நிலைத்தனர்

quelle-eelapadalkal

தம்பி நிதனோடு தங்கை யாழினி

10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.

தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள்
சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ

பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற
பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர்

வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு
வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன்
சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய
சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி

செந்தமிழர் வீதியிலே வந்துநின்ற எதிரிகளை
தேடித்தேடி அடிகொடுத்தார் யாழினி -எங்கள்
தம்பி நிதனோடு பொங்கி சிங்களத்துப் படைகளுக்கு
சாதுரியன் அடிகொடுத்தான் பாடுநீ

கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது
கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு
விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று
விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே

Quelle - eelapadalkal