பாடியவர் - வர்ண.இராமேஸ்வரன்
கரும்புலிகள் இசைநாடாவில் இடம்பெற்றது
தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்
சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா
போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்
புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா
நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்
நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்
நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்
ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்
அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்
உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த
ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.
அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்
அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே
பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்
போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்
மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி
மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment