Saturday, November 25, 2006

நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக

05.10.1987 அன்று இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்களில் ஒன்று இது.

பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள்
குரல்:தேனிசை செல்லப்பா

நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார்
-(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

No comments: