Saturday, November 25, 2006

சங்கு முழங்கடா தமிழா

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தமிழர்படையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்த பாடலிது. பூநகரி வெற்றி பற்றி எழுதப்பட்ட பதிவு: தவளைப் பாய்ச்சல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: பூநகரி நாயகர்
பாடியவர்கள்: சாந்தன், மற்றவர் யாரென்று தெரியவில்லை.


சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே
பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா

நாகதேவன்துறை வேகப்படகுகள்
நம்கையில் வந்ததடா -பகை
ஏவியபீரங்கி யாவுமே எங்களின்
காலிற் கிடக்குதடா -அட
பாயும் புலிகளின் கையில் எதிரியின்
பாசறை வீழ்ந்ததடா -காற்றில்
பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது
வந்த படைகளடா.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.

No comments: